Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மீண்டும் கெத்தாக பழைய நிலைக்குத் திரும்பி வரும் ரஷ்யா : தனக்குத் தானே சூடு வைத்துக்கொண்ட...

    மீண்டும் கெத்தாக பழைய நிலைக்குத் திரும்பி வரும் ரஷ்யா : தனக்குத் தானே சூடு வைத்துக்கொண்ட அமெரிக்கா!

    உக்ரைன்-ரஷ்யா போர் உலக மக்கள் அனைவரையும் மூன்றாவது உலகப்போர் மூண்டுவிடுமோ என்ற பயத்தில் ஆழ்த்தி வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பசி பட்டினியாலும், போர்சூழலில் சிக்கியும் உயிரிழந்து வருகின்றனர். உக்ரைன் மக்கள் அதன் நாட்டில் இருந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். 

    இதனை தடுக்க உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத்தடை விதிக்க ஆரம்பித்தன. அமெரிக்காவின் நட்பு நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் மீது பொருளாதாரத்தடையை விதிக்க ஆரம்பித்தன. சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

    ஆனால், ரஷ்யாவை முடக்கி விடும் நினைப்பில் பொருளாதாரத் தடையை விதித்த அமெரிக்காவுக்கு இந்த நடவடிக்கையே பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இப்பொழுது அமெரிக்கா விதித்த இந்த பொருளாதாரத் தடையினால் ரஷ்யாவை விட அமெரிக்காதான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

    பொருளாதாரத் தடையின் முதல் கட்டமாக ரஷ்யாவில் உள்ள அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அலிகார்க்ஸ்கள் உள்ளிட்ட’சுமார் 300 பேர் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. மேலும், ரஷிய நிறுவனங்கள் தடை செய்யப்பட்டன. இதன் மூலன் ரஷ்யாவின் அந்நிய செலாவணி மதிப்பில் சுமார் 640 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முடக்கப்பட்டது. இதனால் ரஷ்ய டாலரில் வர்த்தகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 

    ரஷ்ய நாட்டில் இருந்து 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கம்பெனிகள் அந்நாட்டை விட்டு வெளியேறின. ரஷ்யாவை ஸ்விப்ட் எனப்படும் சர்வதேச பணப்பரிவர்த்தனை செய்யும் தளத்தில் இருந்து வெளியேற்றியும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

    ஆரம்பத்தில் ரஷ்யாவின் பணமதிப்பு வலுவிழக்கத் தொடங்கியது. டாலருக்கு நிகரான ரஷ்ய ரூபிளின் மதிப்பு 79தில் இருந்து 137 ஆக சரிந்தது. இதன் விளைவாக ரஷ்யா தனது பங்குச்சந்தையை மூன்று வாரங்களுக்கு மூடியது. ஆனால், எப்படி விழுந்ததோ அப்படியே திரும்பி எழுந்து வந்துள்ளது ரஷ்யா. 

    முதலில் ரஷ்யாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. அதன் பின்பாக ரஷ்யா தன் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள நாடுகளுடன் டாலர் பரிவர்த்தனையை ரத்து செய்தது. இதன்படி, அந்நாடுகள் ரஷ்யாவுடன் ரூபிள் பணத்தில்தான் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். 

    குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் நாடுகள் ரூபிளில் தான் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயு தேவையில் 60 சதவீதம் ரஷ்யாவையே சார்ந்துள்ளன. 

    இதனால் டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு 83ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவை முடக்க நினைத்த நாடுகளுக்கு தற்பொழுது இது தலைவலியாக அமைந்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் பரிவர்த்தனையில் சிறப்பு சலுகை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....