Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரி'மருத்துவத்துறை குறித்து அடிப்படை தெரியாதோர் விமர்சிப்பதுதான் ஆச்சரியம்' - நீட் ஆதரவு குறித்து தமிழிசை சௌந்தரராஜன்!

    ‘மருத்துவத்துறை குறித்து அடிப்படை தெரியாதோர் விமர்சிப்பதுதான் ஆச்சரியம்’ – நீட் ஆதரவு குறித்து தமிழிசை சௌந்தரராஜன்!

    நீட் ஆதரவு கருத்து குறித்து மருத்துவத்துறை பற்றி அடிப்படை தெரியாதோர் விமர்சிப்பது தான் ஆச்சரியம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

    புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித் துறை சார்பில் ‘ஹெல்த் கனெக்ட்-புதுச்சேரி’ என்ற கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பத்ம ஸ்ரீ விருதாளர் மருத்துவர் நளினி, சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் ஸ்ரீ ராமலு மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர். 

    இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும்போது, நுண்ணிய குறைபாட்டை கண்டறிந்தால் அதை தவிர்க்கலாம் என்று தோன்றும். பிறப்பதற்கு முன்பாகவே சரி செய்யும் வாய்ப்புகளை கண்டறிந்திருக்க முடியும் என பல நாட்கள் நினைத்ததுண்டு என கூறினார். 

    தொடர்ந்து பேசிய அவர், லாப நோக்கை மட்டும் கருத்தில் கொள்ளாமல் சேவை செய்ய மருத்துவர்கள் முன்வர வேண்டும் எனவும், மரபணு மற்றும் அரிதான நோய்கள் தொடர்பான  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 

    நல்ல மருத்துவர்கள், ஏழ்மை நிலையில் உள்ளோர் மருத்துவத்துக்கு வர நீட் தேர்வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாகவும், மருத்துவத்துறை குறித்து அடிப்படை தெரியாதோர் இதில் விமர்சனம் செய்வதுதான் ஆச்சரியம் என்று தெரிவித்தார்.

    மேலும், தமிழிசை சௌந்தரராஜன், இணையத்தில் தன்னை பற்றி மோசமாக விமர்சித்து எழுதுவதாகவும், தனது மருத்துவ முகத்தை அறியாமல் பரிசகிக்கிறார்கள் எனவும் வெளிப்படையாக பேசினார். 

    துருக்கி நிலநடுக்கம்: இந்தியாவிலிருந்து பறந்த இரண்டு குழுக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....