Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் புதிய படம்; எழுத்தாளர் நரனின் கதையா?

    இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் புதிய படம்; எழுத்தாளர் நரனின் கதையா?

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் சிவா நடிக்கும் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. 

    இயக்குநர் ராம் ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’,  ‘பேரன்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ் பெற்றவர். தமிழ்த் திரையுலகில் முக்கியமான இயக்குநராக இவர் தற்போது வலம்வந்துக்கொண்டிருக்கிறார். 

    இயக்குநர் ராம் தற்போது, மலையாள நடிகர் நிவின் பாலி நடித்துள்ள ‘ஏழு கடல், ஏழு மலை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஞ்சலி, சூரி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் அப்டேட் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த நிலையில், அதன் பிறகு இப்படம் குறித்த எந்தவித அப்டேட்டுகளும் வெளிவரவில்லை. 

    இந்நிலையில், இயக்குநர் ராம் அடுத்தாக ‘சென்னை 28’, ‘தமிழ்ப் படம்’ மூலம் கவனம் பெற்ற நடிகர் சிவா நடிக்க உள்ள படத்தை இயக்கவுள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருடன் இணைந்து ‘செவன் சீஸ் செவன் ஹீல்ஸ்’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது. 

    மிர்ச்சி சிவா, க்ரேஸ் ஆண்டனி நடிக்கும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த எந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இப்படத்தின் பூஜை வெளியிட்டு விழாவில் எழுத்தாளர் நரன் கலந்துக்கொண்டுள்ளார். ஆகையால், நரனின் கதைகளில் ஏதேனும் ஒன்றை இயக்குநர் ராம் படமாக்க உள்ளாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. 

    துருக்கி நிலநடுக்கம்: இந்தியாவிலிருந்து பறந்த இரண்டு குழுக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....