Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஆளுநரின் செயல்பாடுகள் தமிழக அரசுக்கு எதிராக உள்ளதாக கனிமொழி குற்றச்சாட்டு

    ஆளுநரின் செயல்பாடுகள் தமிழக அரசுக்கு எதிராக உள்ளதாக கனிமொழி குற்றச்சாட்டு

    ஆளுநரின் செயல்பாடுகள் தமிழக அரசுக்கு எதிராகவே இருப்பதாக மக்களவையில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதம் நடைபெற்றது. 

    அப்போது திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசுகையில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். 

    உடன்கட்டை ஏறுவது குறித்து மக்களவையில் பெருமையாக பேசுவது வெட்கப்படவைக்கும் செயல் எனவும், பாஜக உறுப்பினர் ஜோஷி பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து வருத்தப்பட வைப்பதாக இருக்கிறது எனவும் கனிமொழி குறிப்பிட்டு கூறினார். 

    ‘தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் எதுவும் இல்லை என்பதால் குடியரசுத் தலைவர் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை’ என கனிமொழி விமர்சனம் செய்தார். 

    துருக்கி நிலநடுக்கம்: இந்தியாவிலிருந்து பறந்த இரண்டு குழுக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....