Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; அமமுக வேட்பாளர் போட்டியிலிருந்து விலகல்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; அமமுக வேட்பாளர் போட்டியிலிருந்து விலகல்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் போட்டியிட மாட்டார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில், அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் போட்டியிட மாட்டார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பொதுத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

    இன்னும் ஓராண்டில் மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், வேறு சின்னத்தில் போட்டியிட்டால் மக்களிடையே குழப்பம் ஏற்படும் என்றும் அதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

    முன்னதாக ஓபிஎஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த செந்தில்முருகன் வாபஸ் பெற்ற நிலையில், தற்போது அமமுக வேட்பாளரும் போட்டியிடவில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    ஆளுநரின் செயல்பாடுகள் தமிழக அரசுக்கு எதிராக உள்ளதாக கனிமொழி குற்றச்சாட்டு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....