Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஆந்திர மாநிலத்தில் வினோத முறை! தடையை மீறினால் நாளைக்கு பால் தான்..

    ஆந்திர மாநிலத்தில் வினோத முறை! தடையை மீறினால் நாளைக்கு பால் தான்..

    ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்தில் 600 வீடுகளில் பசுக்களும் எருமைகளும் இருந்தும் யாருக்கும் பால் விற்பனை செய்வது இல்லை என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் கஞ்சனஹள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஒரு பசு அல்லது எருமைகளை சொந்தமாக வைத்துள்ளனர். இருப்பினும் இவர்கள் பால் விற்பனை மட்டும் செய்வதில்லை. இதற்கு மாறாக, அந்தக் கிராமத்தில் யாருக்கு பால் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு பாலை இலவசமாக கொடுக்கின்றனர். 

    இதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. மாடுகளை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் நூற்றாண்டுகளுக்கு முன்பு சத்குரு மகாத்மா பதே சாஹேப் என்பவர் வலியுறுத்தி சென்றதால், அவ்வூர் மக்கள் இதனையே பின்பற்றி வருகின்றனர். அங்குள்ள சத்குருவின் தர்காவை இன்றும் பலரும் பூஜித்து வருகின்றனர். 

    சத்குருவின் அறிவுறுத்தலை மதிக்காமல் ஒருவர் பால் விற்பனை செய்ததன் காரணமாக, சில நாள்களில் அந்த நபர் மர்மமான முறையில் இறந்ததாக அவ்வூர் மக்கள் சொல்கின்றனர். இதன் காரணமாக, கிராம மக்கள் தினந்தோறும் 3 லிட்டரில் ஒரு லிட்டர் பாலை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுக்கின்றனர். 

    கஞ்சனஹள்ளியில் தினமும் சராசரியாக ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

    இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் புதிய படம்; எழுத்தாளர் நரனின் கதையா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....