Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இனியாவது ஒளிருமா விக்ரமின் துருவ நட்சத்திரம்? - வெளிவந்த அப்டேட்!

    இனியாவது ஒளிருமா விக்ரமின் துருவ நட்சத்திரம்? – வெளிவந்த அப்டேட்!

    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் குறித்து வெளிவந்த அப்டேட் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த திரைப்படம்தான், துருவ நட்சத்திரம். இத்திரைப்படத்தில், நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, சிம்ரன் போன்றோர் நடித்துள்ளனர். மேலும், இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 

    துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த முன்னோட்டம் திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இத்திரைப்படத்தில் இருந்து வெளிவந்த ‘ஒரு மனம்’ பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

    இப்படியாக, நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்ற துருவ நட்சத்திரம், தனது முழுப்படப்பிடிப்பை நிறைவு செய்யவில்லை. பல்வேறு காரணங்களால் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்றுவிட்டது. இருப்பினும், துருவ நட்சத்திரம் எப்போது திரைக்கு வரும் என்று திரைப்பட ரசிகர்கள் பலர் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், துருவ நட்சத்திரம் திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.

    இந்நிலையில், சோனி தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில், ‘இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் உங்களை ஜான் சந்திப்பார்.’ என்று தெரிவித்துள்ளது. இதனால், சமூகவலைதளங்களில் துருவநட்சத்திரம் டிரெண்ட் ஆகி வருகிறது. 

    ஆந்திர மாநிலத்தில் வினோத முறை! தடையை மீறினால் நாளைக்கு பால் தான்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....