Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மீண்டும் ரிலீஸான துணிவு; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

    மீண்டும் ரிலீஸான துணிவு; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

    நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியான படம்தான், துணிவு. நேர்கொண்ட பார்வை, வலிமை என முந்தைய அஜித்குமாரின் முந்தைய படங்களை இயக்கிய எச்.வினோத் குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். 

    போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்த இப்படமானது, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேநேரம், வசூலில் சில சாதனைகளையும் இப்படம் புரிந்தது.  இந்நிலையில், துணிவு படம் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. 

    படம் வெளியாகி இன்னும் முழுவதுமாக ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், துணிவு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அஜித் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இதனிடையே, நடிகர் அஜித்குமாரின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்பது குறித்த பெரும் குழப்பம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 

    இனியாவது ஒளிருமா விக்ரமின் துருவ நட்சத்திரம்? – வெளிவந்த அப்டேட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....