Thursday, March 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக முதல்வர் தலைமையில் ஜனவரி 4ம் தேதி அமைச்சரவை கூட்டம்

    தமிழக முதல்வர் தலைமையில் ஜனவரி 4ம் தேதி அமைச்சரவை கூட்டம்

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகிற புதுவருடம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த அமைச்சரவைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும். தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 35 அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். 

    இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், மசோதாக்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. 

    அதே சமயம், வருகிற புதுவருட ஜனவரி மாதத்தில் சட்டமன்ற கூட்டமும் நடைபெற இருக்கிறது. முதல் நாள் நடைபெறும் சட்டமன்ற கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு முன்பாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. 

    முக்கியமாக, 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அமைச்சர்களின் புதிய செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    மேலும் பல முக்கிய பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.  

    கால்பந்து உலகக் கோப்பை வெற்றி; மக்களுக்கு விடுமுறை அளித்த அர்ஜென்டினா..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....