Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்திய பொருளாதரத்தில் யூடியூபர்ஸின் பங்கு ரூ.10,000 கோடி... வெளிவந்த ரிப்போர்ட்

    இந்திய பொருளாதரத்தில் யூடியூபர்ஸின் பங்கு ரூ.10,000 கோடி… வெளிவந்த ரிப்போர்ட்

    இந்தியப் பொருளாதாரத்துக்கு ரூ.10,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் யூடியூப் பங்களித்துள்ளதாக ஆக்ஸ்போர்டு தெரிவித்துள்ளது. 

    யூடியூப் ஆனது பெரிய அளவில் இந்திய பொருளாதரத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்கம் குறித்து ஆக்ஸ்ஃபோர்டு எகனாமிக்ஸ் வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    இந்தியாவில் உள்ள 4,500-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் 10 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன. இதோடு, இந்தியாவில் 60 சதவீதத்துக்கும் அதிகமான யூடியூப் சேனல்கள் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது. 

    மேலும், யூடியூப் மூலம் இந்தியப் பொருளாதாரத்துக்கு ரூ.10,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பங்களிப்பை வழங்கியுள்ளது. அதன் மூலமாக 7,50,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இந்தியப் பொருளாதாரத்தில் கடந்த ஆண்டில் உருவாகியுள்ளன.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, ‘இரண்டில் ஒரு பயனாளர் திறன் மேம்பாட்டுக்காக யூடியூபை பயன்படுத்தியுள்ளனர். புதிய பணி தேடுபவர்களில் 45 சதவீதம் பேர் யூடியூப் மூலமாகத் தங்கள் திறனை மேம்படுத்திக் கொண்டனர். வழக்கமான கல்வி கற்பித்தல் முறைக்கு மாற்றாக யூடியூப் தளம் உள்ளதாகக் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் நம்புகின்றனர்.’ என்றும் ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் தெரிவித்துள்ளது. 

    மேலும், யூடியூப் மூலமாகக் குழந்தைகளுக்கு கற்பிப்பது சிறப்பானதாக உள்ளதென 83 சதவீதப் பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர். மாணவர்களின் கல்விக்கு யூடியூப் முக்கிய பங்களிப்பதாக 76 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கு யூடியூப் பயன்படுவதாக 77 சதவீதப் பெண் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் ஆக்ஸ்ஃபோர்டு எகனாமிக்ஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அஜித்குமாரின் ‘சில்லா சில்லா’ பாடல் யூடியூப்பில் புரியும் சாதனை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....