Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'தமிழ் மொழி தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை'- அமித் ஷா பேச்சு

    ‘தமிழ் மொழி தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை’- அமித் ஷா பேச்சு

    தமிழ் மொழியால் தமிழர்களுக்கு மட்டுமில்லை; இந்தியாவுக்கே பெருமை என அமித் ஷா தெரிவித்துள்ளார். 

    இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு பவள விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கிரிக்கெட் வீரர் தோனி, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சகர் தங்கம் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    இந்நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

    தமிழ் உலகின் மிக மூத்த, பழைமையான மொழி என்றும் தமிழ் மொழியின் பெருமை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பெறுமை.

    தமிழில் மருத்துவக்கல்வி, பொறியியல் கல்வியை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழில் உரிய பாடத்திட்டங்களை அமைக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். 

    மருத்துவம் பொறியியல் படிப்பு ஆங்கிலத்தில் இருப்பதால் அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால், தாய்மொழியில் உயர்கல்வி படிப்புகளை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

    தமிழகம் மீது பிரதமர் மோடி தனி கவனம் செலுத்தி வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சியை கூர்ந்து பிரதமர் மோடி கவனிக்கிறார்.

    இவ்வாறு, அவர் பேசியுள்ளார். 

    இதையும் படிங்க:ஆப்பரேஷன் திரிசூளம் திட்டம்: ரவுடிகளின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....