Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்ப்பு: சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக, பாஜக

    10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்ப்பு: சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக, பாஜக

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் ,மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் விவாதிக்க சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், கொங்கு மண்டல தேசிய கட்சியின் சின்ராஜ், மனித மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், நாகை மாலி, சின்னத்துரை, பாட்டாளி மக்கள் கட்சியின் பாலு, வெங்கடேஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இதனையடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதவு தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் உரையாற்றியதை தொடர்ந்து, 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக மற்றும் பாஜக ஆகியவை கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ‘தமிழ் மொழி தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை’- அமித் ஷா பேச்சு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....