Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நேட்டோ நாடுகளின் அமைப்பில் இணைகிறது ஸ்வீடன் மற்றும் பின்லாந்து - கடுங்கோபத்தில் ரஷ்யா!

    நேட்டோ நாடுகளின் அமைப்பில் இணைகிறது ஸ்வீடன் மற்றும் பின்லாந்து – கடுங்கோபத்தில் ரஷ்யா!

    உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஸ்வீடனும், பின்லாந்தும் நேட்டோ அமைப்பில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதன் முதல் படியாக அதற்கான விண்ணப்பத்தை இருநாடுகளும் இன்று கையளித்துள்ளன. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணைவதை தடுக்கவே, அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. சுமார், இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இப்போரால், உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. ரஷ்யாவின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

    லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். எனினும், உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியை ரஷ்ய ராணுவத்தினரால் இதுவரை கைப்பற்ற முடியவில்லை. இதனால் கீவ் நகரத்தைச் சுற்றி வளைத்து ரஷ்ய ராணுவம் குண்டுமழை பொழிந்து வருகிறது.

    இந்தச் சூழலில், ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஸ்வீடனும், ஃபின்லாந்தும் நேட்டோ கூட்டணியில் இணையவுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இது ரஷ்யாவுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேட்டோ கூட்டணியில் இணைந்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்த இரு நாடுகளுக்கும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் ரியாப்கோவ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

    மேலும், ரஷ்யா இவற்றையும் மீறி நேட்டோவில் இணைந்தால் அதன் பால்டிக் பகுதியில் உள்ள கலினின்கிராட்டில் அணு ஆயுத ஏவுகணை மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்கப்படும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ரஷ்யாவின் எல்லையில் அமைந்துள்ள நாடு பின்லாந்து. பின்லாந்துடன் எல்லையை கொண்டுள்ளதும், ரஷ்யாவுக்கு அருகில் உள்ளதுமான ஒரு நாடு ஸ்வீடன் என்பது குறிப்பிடத்தக்கது. பின்லாந்தும் ஸ்வீடனும் நீண்டகாலமாக அணி சேரா கொள்கையை கடைபிடித்து வந்தன. எனினும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பானது பின்லாந்து ஸ்வீடன் ஆகிய நாடுகளின் இராணுவ கொள்கையை கைவிடச் செய்து உள்ளது.

    இனி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் போடப்படாது – பொது சுகாதாரத் துறை அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....