Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇனி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் போடப்படாது - பொது சுகாதாரத் துறை அறிவிப்பு

    இனி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் போடப்படாது – பொது சுகாதாரத் துறை அறிவிப்பு

    தமிழகத்தில் 18 முதல் 59 வயது உள்ளவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில், ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடப்படாது’ என பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

    பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மத்திய அரசு வழிகாட்டுதல்படி, 2021 ஜனவரி 16 முதல், ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் தமிழகத்தில் போடப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, ‘கோர்பேவாக்ஸ் மற்றும் ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன.

    தற்போது, ‘கோவோவேக்ஸ்’ தடுப்பு மருந்து, தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 12 முதல் 17 வயது உடையவர்கள், தனியார் மருத்துவமனைகளில், ‘கோவோவேக்ஸ்’ தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். அதேபோன்று, 12 முதல் 17 வயது உடையவர்கள், முதல் மற்றும் இரண்டாம் தவணையாக, ‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசியை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.

    மேலும், 15 முதல் 17 வயது உடையவர்கள், கோவாக்சின் தடுப்பூசியை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம். முதல் மற்றும் இரண்டாம் தவணையாக, கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடலாம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக போட்டு கொள்ளலாம்.

    ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசியை, 18 வயதுக்கு மேற்பட்டோர், தனியார் மருத்துவமனைகளில் போட்டு கொள்ளலாம். 18 – 59 வயதுக்கு உட்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படாது. அதேநேரம், தனியார் மருத்துவமனைகளில் போட்டு கொள்ளலாம்.

    இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்கள், எந்த நாட்டுக்கு செல்கிறார்களோ அந்த நாட்டின் பயண வழிகாட்டு விதிமுறைகளின்படி உடனடியாக முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இந்த புது வசதி ‘கோவின்’ இணையதளத்தில் விரைவில் கிடைக்கும்” என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பதிவில் ஒரு வாரம் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் தற்கொலை; காவலர்கள் மத்தியில் பரபரப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....