Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபோதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    பள்ளிகளில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்களை எடுக்க செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

    பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை (ஆகஸ்ட் 11) தொடங்கி வைக்க உள்ளார். 

    இதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

    அதன்படி, நாளை (ஆகஸ்ட் 11) காலை 10.30 மணியளவில் அனைத்து பள்ளிகளும் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழியை மாணவர்களை எடுக்க செய்ய வேண்டும். விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது குறித்த விவரங்களை நாளை பிற்பகலில் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    வல்லுனர் குழுவே பரிந்துரைத்த பிறகும், தமிழக அரசு தாமதிப்பது ஏன்?- பாமக நிறுவனர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....