Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்வல்லுனர் குழுவே பரிந்துரைத்த பிறகும், தமிழக அரசு தாமதிப்பது ஏன்?- பாமக நிறுவனர்

    வல்லுனர் குழுவே பரிந்துரைத்த பிறகும், தமிழக அரசு தாமதிப்பது ஏன்?- பாமக நிறுவனர்

    ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டத்தை, தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனரும் மருத்துவருமான ராமதாசு தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து மருத்துவர் ராமதாசு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: 

    ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சம் பணத்தை இழந்த வேதனையில் ராசிபுரம் அருகே சுரேஷ் என்ற பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சுரேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்று கடந்த ஆண்டு இதே நாளில் தான் சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. அன்றிலிருந்து இன்று வரையிலான ஓராண்டில்  28 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால்  உயிரை இழந்திருக்கின்றனர்.

    ஆன்லைன் சூதாட்டம் ஒருவரை எந்த அளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் கடிதம் தான் சாட்சியம். பணம் இருந்தால் 5 நிமிடம் கூட ஆன்லைன் ரம்மி ஆடாமல் இருக்க முடியவில்லை என்று இளைஞர் சுரேஷ்  கடிதம் எழுதி வைத்திருக்கிறார். online rummy

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வல்லுனர் குழுவே பரிந்துரைத்த பிறகும் அவசரச் சட்டம் பிறப்பிக்காமல், தமிழக அரசு தாமதிப்பது ஏன்? இனியும் தாமதிக்காமல் ஆன்லைன்  சூதாட்ட அவசர சட்டத்தை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு, பாமக நிறுவனர் ராமதாசு தெரிவித்துள்ளார்.

    கல்லூரி பேராசிரியர்களுக்கு பணியிட மாறுதலை அரசு உறுதி செய்ய வேண்டும்- பாமக தலைவர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....