Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளைப்போகிறது - சீமான் காட்டம்

    தமிழர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளைப்போகிறது – சீமான் காட்டம்

    தமிழ் தெரியாதவர்களை வேண்டுமென்றே பணி நியமனம் செய்யும் இந்திய மத்திய அரசின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார். 

    தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான வங்கிகளில் தமிழ் தெரியாத பிறமாநிலத்தவரை அதிக அளவில் பணியமர்த்தும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. மக்கள் சேவைத்துறைகளில் தமிழ் தெரியாதவர்களை வேண்டுமென்றே பணி நியமனம் செய்யும் இந்திய மத்திய அரசின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார். 

    மேலும், இது குறித்து சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    தமிழ்நாட்டில் உள்ள சிறுகடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து வகையான கூலித்தொழில்கள் என எல்லா பணி வாய்ப்புகளும் இலட்சக்கணக்கில் வடமாநிலத்தவரால் ஆக்கிரமிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள என்.எல்.சி, எல்.ஐ.சி, பி.எச்.இ.எல் உள்ளிட்ட இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட மாநிலத்தவரே பல்லாயிரக்கணக்கில் பணி வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.

    மேலும், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட இந்திய மத்திய அரசின் நிர்வாகத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் வடமாநிலத்தவரே நியமிக்கப்படுகின்றனர்.

    இதனால், தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பறிபோவதோடு, தமிழர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் பொருளாதாரமும் கொள்ளைபோகிறது. மேலும் தமிழகத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற குறைந்தபட்ச ஊதிய உரிமையும் பறிபோய் வர்க்க பாகுபாட்டில் தமிழ்நாடு பல ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் அவலச்சூழலும் ஏற்படுகிறது. 

    வடமாநிலத்தவர் நிரந்தரமாகக் குடியேறுவதால் தமிழர்களின் பண்பாடு, வழிபாடு என அனைத்தும் பேரழிவை நோக்கிச் செல்கிறது. அதுமட்டுமின்றி, குடியேறிய சில மாதங்களிலேயே குடும்ப அட்டை முதல் வாக்காளர் அட்டை வரை அனைத்தையும் பெறுவதால் தமிழர்களின் அரசியல் அதிகாரமும் முற்றாக வடவரிடம் பறிபோகும் பேராபத்தும் ஏற்படுகிறது.

    இதனால், பணிநிமித்தமாக தமிழ்நாட்டில் நாள்தோறும் நிகழும் வடவர் குடியேற்றத்தைத் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் அரசியல் மற்றும் பண்பாட்டுப் படையெடுப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது.

    இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற கடந்த 8 ஆண்டுகளில் இத்தகைய வடவர் திணிப்பு இலட்சக்கணக்கில் பலமடங்கு வீரியமாக அதிகரித்துள்ளது. இது, எதிர்காலத்தில் இந்துத்துவத்தைத் தமிழ் மண்ணில் விதைப்பதற்கான வலுவான அடித்தளமேயன்றி வேறில்லை. இதனை, இனியும் தொடர அனுமதித்தால் ஈழத்தைப் போல் தமிழ்நாட்டிலும், தமிழர்கள் தங்கள் சொந்த தாயகத்தில் அதிகாரம் ஏதுமற்ற அகதியாகும் அவலநிலை ஏற்படும்.

    வங்கி, அஞ்சலகம் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து மக்கள் சேவைத் துறைகளிலும் பணிபுரியும், தமிழ் தெரியாத பிறமாநிலத்தவரைக் கணக்கெடுத்து அவர்களை உடனடியாகப் பணியிடமாற்றம் செய்ய வேண்டுமெனவும், தமிழ்நாட்டில் பணிபுரிய தமிழ் எழுத, படிக்க, பேச தெரிந்திருப்பது கட்டாயம் என்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், ஆளும் பாஜக அரசினை வலியுறுத்துகிறேன். 

    இவ்வாறு, சீமான் தெரிவித்துள்ளார். 

    மேலும், தமிழ்நாட்டின் தன்னாட்சி, இறையாண்மை மற்றும் தமிழர்களின் வாழ்வுரிமையை அழித்தொழிக்கும், வடவர் திணிப்பைக் கட்டுப்படுத்த நுழைவுச் சீட்டு உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை முழுவீச்சில் எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசையும் தான் கேட்டுக்கொள்வதாக சீமான் தெரிவித்துள்ளார். 

    கல்லூரி பேராசிரியர்களுக்கு பணியிட மாறுதலை அரசு உறுதி செய்ய வேண்டும்- பாமக தலைவர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....