Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; குடிநீர் வழங்குவதில் சிக்கல்

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; குடிநீர் வழங்குவதில் சிக்கல்

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் குடிநீர் விநியோகம் தொடர்பாக செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். 

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கும்பகோணம் மாநகராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். 

    இது குறித்து கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான குடிதாங்கி தலைமை நீரேற்று நிலைய குடிநீர்க் கிணறுகள் முழுவதுமாக மூழ்கிவிட்டன. 

    இதனால், மின் மோட்டார்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் தடங்கள் ஏற்பட்டுள்ளது. 

    ஆகவே, மாநகராட்சி பகுதிகளுக்கு உள்பட்ட மக்கள், தங்களுக்கு வழங்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வெள்ளப்பெருக்கு முடிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறாக, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    16 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா தொற்று

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....