Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்- பாமக தலைவர் 

    தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்- பாமக தலைவர் 

    செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற்றத்தைக் கண்டு, தமிழன் என்ற முறையில் பெருமை கொள்வதாகவும், பெருமிதம் அடைவதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து, இன்று (ஆகஸ்ட் 10) அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதவாது:

    சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தமிழர்களின் கலாச்சாரம், விளையாட்டுகள் தோன்றிய வரலாறு, தமிழர்களின்  வலிமை ஆகியவை தத்ரூபமாக சித்தரித்துக் காட்டப்பட்டன. ஒட்டுமொத்த உலகமும் இதை பார்த்து அறிந்தது.

    சென்னையில்  நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்கவிழாவும்,  மாமல்லபுரத்தில் நடந்த போட்டிகளும் ஒட்டுமொத்த உலகமே பாராட்டும் வகையில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன. இவற்றைக் கண்டு, தமிழன் என்ற முறையில் நான் பெருமையும், பெருமிதமும் அடைகிறேன்.

    செஸ் ஒலிம்பியாடையும், அதன் தொடக்க, நிறைவு விழாக்களையும் மிகச்சிறப்பாக நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கும், விழாக்களை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் நிகல் சரின், அர்ஜுன், மகளிர் அணியில் இடம் பெற்றிருந்த வீராங்கனைகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    கிராமசபைக் கூட்டங்களில் பாமகவினர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்- பாமக தலைவர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....