Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்மாணவர்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: புதுச்சேரி அரசை எச்சரித்த அதிமுகவினர்

    மாணவர்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: புதுச்சேரி அரசை எச்சரித்த அதிமுகவினர்

    புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தில் வேலைவாய்ப்பில் புதுச்சேரி இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்காத நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரி அதிமுகவினர் 500-க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள 431 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதில் பல்வேறு பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி மாணவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவபடிப்பில் வழங்குவது போன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை செவிலியர் வேலை வாய்ப்பில் 26.5 சதவீதம் வழங்க கோரியும், இடொதுக்கீடு வழங்காத ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஜிப்பர் மருத்துவமனை எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஜிப்மர் நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர்களுக்கான காலி பணியிட இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தை சந்தித்து முதல்வரும், கவர்னரும் தலையிட்டு தேர்வை தடுத்து நிறுத்தி புதுச்சேரி மாணவர்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை வேண்டும், என்றும், அப்படி இல்லாத பட்சத்தில் அதிமுக தலைமையின் அனுமதி பெற்று மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துனர்.

    அமித்ஷாவை சந்தித்த ரவீந்திர ஜடேஜா..வைரலாகும் புகைப்படங்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....