Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி; அடுத்தடுத்து 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்...

    நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி; அடுத்தடுத்து 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்…

    பிரேக் பிடிக்காத லாரியால் 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. 30 பேர் காயமடைந்துள்ளனர். 

    மராட்டிய மாநிலம் புனேவில் இரவு 9 மணிக்கு ஒரு டேங்கர் லாரி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, மும்பை – பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நவாலே மேம்பாலத்தில் லாரி சென்றுக்கொண்டிருந்தபோது, பிரேக் பிடிக்காமல் முன்னே சென்றுக்கொண்டிருந்த வாகனங்கள் மீது கண்மூடித்தனமாக மோதியது. 

    இதனால் லாரிக்கு பின்னே வந்த வாகனங்கள் அவசரத்தில் பிரேக் போட்டதால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. இந்த விபத்தில் 40-க்கும் அதிகமான வாகனங்கள் சேதம் அடைந்தன.

    இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் இரண்டு கிலோமீட்டருக்கு அதிகமாக வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இந்த மோதலில், டேங்கரில் இருந்த எண்ணெய் சாலை முழுவதும் கசிந்து, முழுக்க முழுக்க ஆயிலாக மாறியது. சம்பவத்தை கேள்விப்பட்டு, தீயனைப்புத்துறையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தீயணைப்பு துறையினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சேதம் அடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அமித்ஷாவை சந்தித்த ரவீந்திர ஜடேஜா..வைரலாகும் புகைப்படங்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....