Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநிறுத்து.. நிறுத்து.. ஏர் ஓட்டும் நிலத்தில் விமானநிலையம் அமைப்பதை நிறுத்து! ஆவேச கொந்தளிப்பில் பரந்தூர் மக்கள்

    நிறுத்து.. நிறுத்து.. ஏர் ஓட்டும் நிலத்தில் விமானநிலையம் அமைப்பதை நிறுத்து! ஆவேச கொந்தளிப்பில் பரந்தூர் மக்கள்

    பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்ததற்கு பரந்தூர் சுற்று வட்டார கிராம மக்கள் 117 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4,750 ஏக்கர் பரப்பளவில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என முன்னதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிப்பை வெளியிட்டன. மேலும் பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள விளை நிலங்கள், நீர் நிலைகள், குடியிருப்புகள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி செய்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து, விமான நிலையம் அமைக்கப்படும் நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், எஃனாபுரம், மடப்புரம், மேலேறி ஆகிய கிராமப் புறங்களின் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அதே சமயம், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை அவ்வூர் சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்று வட்டார கிராம மக்கள் 117 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நேற்று இரவு முழுவதும் கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், ஏர் ஓட்டும் நிலத்தில் ஏர்போர்ட் தேவையா? என முழக்கமிட்டு விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிடக் கோரி வருகின்றனர். 

    இதனிடையே, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்காவிட்டால், தமிழகத்தில் பல மடங்கு தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி தேக்கமடையும் என தெரிவித்துள்ளார்.

    கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு நவீன கருவிகளை கொள்முதல் செய்ய வேண்டும்: அரசுக்கு கோரிக்கை வைத்த திருமாவளவன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....