Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய மர்ம நபர்கள்

    மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய மர்ம நபர்கள்

    ஹவுரா- நியூ ஜல்பைகுரி இடையே தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் இயக்கப்படுகிறது. தில்லி – வாரணாசி, தில்லி – காத்ரா, குஜராத் மாநிலம் காந்திநகர் – மும்பை, அம்ப் அண்டவ்ரா – புது தில்லி, மைசூரு – சென்னை உட்பட 7 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி மேற்குவங்க மாநிலம் ஹவுரா- நியூ ஜல்பைகுரி இடையே கடந்த மாதம் 30-ஆம் தேதி வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி காணொளி காட்சியின் வாயிலாக தொடங்கி வைத்தார். 

    இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி நான்கு நாட்களே ஆன நிலையில், வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு நடைபெற்றுள்ளது. 

    இதன் காரணமாக, வந்தே பாரத் ரயிலின் கண்ணாடிகள் சேதமடைந்தன. இந்தக் கல்வீச்சு சம்பவம் மல்டா ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது ரயில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கல் வீச்சில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....