Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதித்த புதிய விதிமுறைகள்

    ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதித்த புதிய விதிமுறைகள்

    ஆன்லைன் விளையாட்டை நடத்துகிற நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

    ஆன்லைன் விளையாட்டு மூலம் பல பேர் தங்களின் பணத்தை வைத்து விளையாடுகின்றனர். சிலர் கடன் வாங்கியும் பலர் வட்டிக்கு வாங்கியும் இந்த ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். பணத்தை இழந்த சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழகத்தை பொறுத்தவரையில் 35-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். 

    இதையடுத்து தமிழக அரசும் தமிழகதில் உள்ள கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கான தடை சட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

    இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டை நடத்தி வரும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. 

    அதன்படி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு இந்திய முகவரிகள் மற்றும் விளையாடுவோரின் முகவைகள் சரிபார்ப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் இடைத்தரகர்கள், ஆன்லைன் விளையாட்டில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக எழும் புகார்களை குறைதீர்க்கும் முறையில் சரி செய்ய வேண்டும் என்றும் இந்திய நாட்டின் சட்ட விதிமுறைகளை பின்பற்றி விளையாட்டுகள் நடைபெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதே சமயம், ஆன்லைன் விளையாட்டுகளில் சூது வைத்து விளையாடும் விளையாட்டுகளுக்கு தகுதியான வயது தொடர்பான சட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நாடாளுமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிய நிலையில், மத்திய அரசு இந்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

    நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை! எதற்கு தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....