Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்சரிவிலிருந்து மீண்ட பங்குச்சந்தைகள்! இனி கெத்துதான்!

    சரிவிலிருந்து மீண்ட பங்குச்சந்தைகள்! இனி கெத்துதான்!

    கடந்த ஆறு நாட்களாய் ஒட்டுமொத்த பங்குச்சந்தைகளும் சரிந்து கொண்டிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை ஏற்றம் கண்டுள்ளன.

    சமீப காலமாக உலகில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பணவீக்கம் ஒரு புறம் பங்குச் சந்தைகளை கடுமையாக பாதித்தவண்ணம் இருக்க, உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து கொண்டிருக்கும் போரினால் கச்சா எண்ணெய்களின் விலை பெருமளவு அதிகரித்து மற்றொரு பக்கம் பங்கு வர்த்தகத்தினை பதித்துக் கொண்டுள்ளது. 

    பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்த இந்தியா முதல் உலகில் உள்ள பல நாடுகளும் தங்களது வரி விகிதத்தினை உயர்த்தித்தியுள்ளன. மேற்கூறிய காரணங்களால், பங்குச்சந்தை மட்டுமல்லாது, தங்கம், கிரிப்டோ வர்த்தகம் என அனைத்து வணிகங்களும் சரிந்த நிலையிலேயே இருந்து வந்தன.

    சமீபத்தில் இந்தியாவில் நிலவி வரும் கோதுமைத் தட்டுப்பாட்டினை குறைக்க, கோதுமை ஏற்றுமதியினை தடை செய்துள்ள சம்பவமும் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.

    நிலைமை இப்படி இருக்க இன்று பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டு சிறிதளவு நிம்மதியினை ஏற்படுத்தியுள்ளது, வர்த்தகர்களிடையே இந்த மீள்வு சற்று ஆறுதலை ஏற்படுத்தும் விடயமாய் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    வாரத்தின் முதல் நாளான இன்று, சென்செக்ஸ் 180.22 புள்ளிகள் உயர்ந்து 52,973.84 ஆகவும், நிப்டி 60.15 புள்ளிகள் உயர்ந்து 15,842.30 ஆகவும் உள்ளன. இன்று வர்த்தகம் நடந்த பொழுது சென்செக்ஸ் 634 புள்ளிகள் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

    அம்புஜம் சிமெண்ட்ஸ் நிறுவனத்தினை அதானி குழுமம் கைப்பற்றப்போவதாய் வெளிவந்துள்ள செய்தியினையடுத்து அதன் பங்குகள் வெகுவாக வாங்கப்பட்டன. இதனால் இவ்வளவு நாட்களாக ஏற்றம் கண்டு வந்த ஸ்ரீ சிமெண்ட்ஸ் இன்று சரிவடைந்துள்ளது.

    ஈச்சர் மோட்டார்ஸ் இன்று அதிக ஏற்றத்தினை சந்தித்துள்ளது. வோடஃபோன் நிறுவனம் 13 சதவீதம் சரிவினைச் சந்தித்துள்ளது.

    தங்கத்தினைப் பொறுத்தவரையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. 22 காரட் தங்கம் கிராமிற்கு  4,737ஆகவும், சவரனுக்கு 73,896 ஆகவும் உள்ளது. வெள்ளியின் விலையில் சிறிது மற்றம் நிகழ்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து 64.50 ரூபாயாகவும், சவரனின் விலை 6.40 ருபாய் உயர்ந்து 516 ஆகவும் உள்ளது.

    கிரிப்டோ மார்க்கெட்டினைப் பொறுத்தவரையில் இன்று ஏற்றமும் இறக்கமுமாகவே உள்ளது. தினமும் இதுபோல் தன் இருக்கும் என்றாலும் இன்று முக்கிய கிரிப்டோ நாணயங்களான பிட்காயின், எத்திரியம் போன்றவை சிறிது அதிக அளவு ஏற்றம் கண்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி பிட்காயின் 23,23,600 ரூபாயாகவும், எத்திரியம் 1,58,200 ரூபாயாகவும் உள்ளது.

    பலரும் உருகிக்கொண்டிருக்கும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் வாழ்க்கை பாதை, உங்களுக்காக இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....