Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ட்விட்டர் நிறுவனத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? - துர்நாற்றத்தில் ஊழியர்கள்..

    ட்விட்டர் நிறுவனத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? – துர்நாற்றத்தில் ஊழியர்கள்..

    கலிபோர்னியாவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் சுத்தம் செய்ய ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

    எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு சம்பவங்கள் ட்விட்டரில் நிகழ்ந்து வருகின்றன. அவரின் செயல்கள் ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வண்ணமே உள்ளது. குறிப்பாக, ப்ளூ டிக், ஊழியர்கள் பணி நீக்கம் போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. 

    எலான் மஸ்க்கை தொடர்ந்து சர்ச்சைகள் சுற்றிய வண்ணம் இருந்தாலும், அவர் சற்றும் ஓயாது மேலும் பல அதிர்ச்சிகர செயல்களை செய்கிறார். அந்த வகையில், சமீபத்தில் சி.என்.என், தி வாஷிங்டன் போஸ்ட், தி நியூயார்க் டைம்ஸ், தி இண்டிபெண்டன்ட் உள்ளிட்ட பிரபல செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை எலான் மஸ்க் முடக்கினார். இதனால் எலான் மஸக்கிற்கு பல தரப்புகளிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. 

    சமீப காலமாகவே ட்விட்டர் தொடர்ந்து களேபரமாக உள்ளது. இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்திலிருந்து துர்நாற்றம் வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

    எலான் மஸ்க் ட்விட்டரை வசப்படுத்திய பிறகு, ட்வீட்டரில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தினர். ஆனால், எலான் மஸ்க், போராட்டம் நடத்தியவர்களை வேலையிலிருந்து நீக்கினார். இதனால் ட்விட்டர் தலைமையகத்தில் சுத்தம் செய்ய ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் அவதிக்குள்ளாகினர். 

    அர்ஜூன் ரெட்டி இயக்குநரின் அடுத்தப் படம்; ரத்தம் வடிய வடிய ஒரு போஸ்டர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....