Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாராஜஸ்தானில் தடம்புரண்ட ரயில்; விரைந்த நிர்வாகிகள்..

    ராஜஸ்தானில் தடம்புரண்ட ரயில்; விரைந்த நிர்வாகிகள்..

    ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி அருகே பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ராஜஸ்தான் மாநிலத்தில், சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் பாந்த்ரா முனையத்திலிருந்து ஜோத்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 3.27 மணியளவில் இந்த ரயில் தடம்புரண்டது. இந்த சம்பவத்தில் 11 பெட்டிகள் பாதிக்கப்பட்டன. 

    இதைத்தொடர்ந்து, விபத்து குறித்து ரயில்வே நிர்வாகிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு பேருந்துகளில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சூரியநகரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தால், அந்த பாதையில் பயணப்பட இருந்த ரயில்களின் சேவைகள் பாதிப்படைந்தன. இந்த விபத்தில் இதுவரை 24 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், அவசர தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நல்ல வேளையாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....