Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅர்ஜூன் ரெட்டி இயக்குநரின் அடுத்தப் படம்; ரத்தம் வடிய வடிய ஒரு போஸ்டர்..

    அர்ஜூன் ரெட்டி இயக்குநரின் அடுத்தப் படம்; ரத்தம் வடிய வடிய ஒரு போஸ்டர்..

    அர்ஜூன் ரெட்டி இயக்குநரின் இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள அனிமல் திரைப்பட போஸ்டர் வெளியாகியுள்ளது. 

    விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான், அர்ஜூன் ரெட்டி. இத்திரைப்படத்திற்கு பிறகுதான் விஜய் தேவரகொண்டா பிரபல நடிகராக உருவெடுத்தார். இப்படியான திரைப்படத்தை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். 

    இந்த அர்ஜூன் ரெட்டி திரைப்படமானது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இதுமட்டுமல்லாமல், தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரிலும் , இந்தியில் கபீர் சிங் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தி பதிப்பை அர்ஜூன் ரெட்டியை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவே இயக்கியிருந்தார். 

    animal movie

    இந்நிலையில், தற்போது இந்த இயக்குநரின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது. அதன்படி, ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள அனிமல் என்ற திரைப்படத்தை தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். 

    புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்துள்ளது. அப்போஸ்டரில், ரன்பீர் கபூர் ரத்தம் வடிய வடிய கையில் சுத்தியலுடனும், சிகரெட் பிடித்துக்கொண்டும் உள்ளார்.

    சவுதி அரேபியாவுடன் கைகோர்த்த ரொனால்டோ; ஊதியம் ரூ.600 கோடியா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....