Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா: தமிழர்களுக்கு அனுமதி?

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா: தமிழர்களுக்கு அனுமதி?

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க 5 ஆயிரம் தமிழர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சத்தீவில் மிகவும் புகழ்ப்பெற்ற பழமைவாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 

    இந்நிலையில், வருகிற மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. 

    இந்த திருவிழா குறித்த முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கை அரசு அதிகாரிகள், இந்தியாவிற்கான இலங்கை தூதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    இந்தக் கூட்டத்தில், 5 ஆயிரம் தமிழர்களை கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தத் திருவிழாவிற்கான முழு ஏற்பாடுகளை இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், நெடுந்தீவு நிர்வாகம் மற்றும் இலங்கை கடற்படை சார்பில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

    பூமியை நோக்கி வந்துக்கொண்டிருந்த விண்கல்; அப்டேட் சொன்ன நாசா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....