Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பூமியை நோக்கி வந்துக்கொண்டிருந்த விண்கல்; அப்டேட் சொன்ன நாசா

    பூமியை நோக்கி வந்துக்கொண்டிருந்த விண்கல்; அப்டேட் சொன்ன நாசா

    ’2023 BU’ என்ற விண்கல் எந்த வித ஆபத்தும் இல்லாமல் இன்று பூமியை கடந்து சென்றதாக நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    பூமியை நோக்கி பல விண்கல்கள் அவ்வப்போது வருவதாக தகவல்கள் வெளிவரும். அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு விண்கல் ஒன்று பூமியை கடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த விண்கல் சிறிய அளவிலானது என்றும், அதற்கு ’2023 BU’ என்றும் பெயர் வைக்கப்பட்டது. 

    இந்த விண்கல்லை, உக்ரைனின் க்ரிமியா பிராந்தியத்திலுள்ள அமெச்சூர் விண்வெளி நிபுணரான கென்னடி போரிசோ என்பவர் கடந்த வாரம் கண்டுபிடித்தார். இதைத்தொடர்ந்து, இந்த விண்கல்லின் சுற்றுவட்டப்பாதை குறித்து அறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், ’2023 BU’ விண்கல் எந்த வித ஆபத்தும் இல்லாமல் இன்று பூமியை கடந்து சென்றதாக நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ’2023 BU’ என்ற விண்கல் பூமிக்கு சுமார் 3,600 கிமீ நெருக்கத்தில் வந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. 

    வட மாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களை தூரத்தி தூரத்தி அடித்த சம்பவம்..வைரலான வீடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....