Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதிருமணம் முடிந்த கையோடு புதுமண மக்கள் செய்த பாராட்டுக்குரிய செயல்

    திருமணம் முடிந்த கையோடு புதுமண மக்கள் செய்த பாராட்டுக்குரிய செயல்

    திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி அளித்த புது மணமக்களின் செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. 

    அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம் அருகே கோவிந்த புத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்தையன். இவரது மனைவி ராஜேஸ்வரி. முத்தையன் அரசு டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். 

    இவர்களின் மகன் மணிகண்டன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் திருமணம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோவிந்த புத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற கங்காஜடேஸ்வரர் ஆலயத்தில் இன்று ஊர் பொதுமக்கள் முன்னே திருமணம் நடைபெற்றது. 

    இவர்கள் திருமணம் முடிந்த கையோடு தன்னுடைய சேமிப்பு பணத்தை தான் படித்த அரசு பள்ளிக்கு கல்வி வளர்ச்சி பணிக்காக அளிப்பதற்கு மணிகண்டன் முடிவு செய்தார். இதை தனது மனைவி பிரியங்காவிடமும் அவர் கூறினார். அதோடு அவரும் சம்மதம் தெரிவிக்கவே, இருவரும் திருமணம் முடிந்த கையோடு அருகில் இருந்த அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு நேரில் சென்றனர். 

    அங்கு சென்ற அவர்கள், 10 ஆயிரம் ரூபாய்க்கான தொகையை தலைமை ஆசிரியரிடம் அளித்தனர். மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பிறகு தான் மண்டபத்திற்கும் சென்றனர். புதுமணமக்களின் இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. 

    ஜியோ நிறுவனத்தின் நன்கொடை! திருப்பதியில் இனி கொட்டும் வேகமான லட்டு மழை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....