Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇன்று தொடங்குகிறது முதல் இருபது ஓவர்; மூத்த வீரர்கள் இல்லாமல் வெற்றிக்கொடி கட்டுமா இந்தியா?

    இன்று தொடங்குகிறது முதல் இருபது ஓவர்; மூத்த வீரர்கள் இல்லாமல் வெற்றிக்கொடி கட்டுமா இந்தியா?

    இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடும் இருபது ஓவர் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது. 

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடர் மற்றும் இருபது ஓவர் தொடர் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படியே, ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. இதில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. 

    இதைத்தொடர்ந்து, இன்று இருபது ஓவர் தொடர் தொடங்கவுள்ளது. இருபது ஓவர் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், இன்று நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுகிறார். எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். 

    ஒருநாள் தொடரில் தன்னை நிரூபித்த இந்திய அணி, இருபது ஓவர் தொடரிலும் தன்னை நிரூபிக்கும் முனைப்பில் விளையாடும். அதேநேரம், ஒருநாள் தொடரை முற்றிலுமாக இழந்த நியூசிலாந்து இருபது ஓவர் தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடும். இதனால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    மேலும், இன்றைய போட்டியானது ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    யூடியூபர் பிராங்ஸ்டர் ராகுல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....