Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கையில் நிலைமை மோசம்: பஞ்சத்தில் மக்கள்

    இலங்கையில் நிலைமை மோசம்: பஞ்சத்தில் மக்கள்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையாக பொருளாதார நெருக்கடியால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எப்போது இந்நிலை சரியாகும் எனத் தெரியவில்லை. ஆனால், இப்போதிருக்கும் நிலை நீடித்தால், இலங்கையில் மிகக் கடுமையான பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இலங்கையில் உச்சத்தை அடைந்துள்ள பொருளாதாரப் பிரச்சனையால், எரிபொருள் தட்டுப்பாடும் நீடித்து வருகிறது. தேவையான அளவு எரிபொருள் கிடைக்காத காரணத்தால், வாகனங்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், முடிந்த அளவு எரிபொருள் தேவையைக் குறைக்க, அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் முக்கியமாக, இலங்கை முழுவதும் உணவுத் தட்டுப்பாடும் தற்போது அதிகரித்து வருகிறது. வாகனப் போக்குவரத்து இல்லாத காரணத்தால், கடைகள் மற்றும் சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வரத்து குறைந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு வாரமாக இந்நிலை நீடிப்பதால், சிறு கடைகள் முதல் பெரிய அளவிலான சூப்பர் மார்க்கெட் வரை, அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்களிலும் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு குறைந்து வருகிறது.

    இதனால், கடைகள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகிறது. இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில், அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு, வந்து சேராததால் கடை உரிமையாளர்கள் அனைவரும் தவிப்பில் இருக்கின்றனர். இதனால், கூடிய விரைவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டு, அதன் காரணமாக இலங்கை மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் மிகவும் மோசமான நிலையை, தற்போது தாம் எதிர்கொண்டு வருகிறோம் என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தால் மட்டுமே, இந்தப் பிரச்னைகளுக்கு முடிவு கட்ட முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

    தொடக்கத்திலேயே பொருளாதார வீழ்ச்சியை தாமதப்படுத்துவதற்கு முயற்சி எடுத்திருந்தால், இன்று நாம் இந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்க நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், இந்த வாய்ப்பை நாம் இழந்தோம். மிகவும் கீழே விழுந்துவிடக் கூடும் என்பதற்கான அறிகுறிகளை இப்போது காண்கிறோம். எனினும், இந்த சூழலில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். இல்லையென்றால் நாட்டில் வேறு எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது என இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

    15 கோடி மதிப்பிலான சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....