Monday, March 18, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்தனது முதல் மொபைல் போனை வெளியிடத் தயாராகும் நத்திங் நிறுவனம்..!

    தனது முதல் மொபைல் போனை வெளியிடத் தயாராகும் நத்திங் நிறுவனம்..!

    நத்திங் என்னும் பெயர் கொண்ட நிறுவனம் இதற்கு முன்னதாக  இரண்டு ப்ளூடூத் இயர்போன்களை அறிமுகப்படுத்தியிருந்தது.  ஃபிலிப்கார்ட் வலைதளத்தில் விற்பனையான இந்த இரண்டு இயர்போன்களும் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன.

    வித்தியாசமான தோற்றத்துடன், நல்ல ஒலிதரத்தினைக் கொண்டிருந்த இந்த நத்திங் இயர்போன்கள் அதிக மக்களால் வாங்கப்பட்டன.

    இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிறுவனமானது தங்களது முதல் மொபைல் போனினை தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தது. இந்த போனிற்கு நத்திங் போன் (1) என பெயரிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போனின் ஸ்பெசிபிகேஷன்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன. இதன்படி, இந்த போனானது 6.55 இன்ச் அமோல்ட் டிஸ்பிளேயுடன், 1080*2400 பிக்சல் என்கிற அமைப்பினைக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நத்திங் போனின் டிஸ்பிளே அமைப்பானது சாம்சங் நிறுவனத்தின் உயர்ரக மொபைலான, கேலக்சி எஸ்22 போனின் அமைப்பினைப் போன்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நத்திங் போனின் முழு அம்சங்கள்:

    ப்ராசசர்: ஸ்னாப்ட்ராகன் 778G.

    மெமரி: 128 ஜிபி ரோம், 8 ஜிபி ரேம்.

    பின்பக்க கேமரா: 50எம்பி+8எம்பி+2எம்பி.

    முன்பக்க கேமரா: 32எம்பி.

    இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 12

    பேட்டரி: 4500 அல்லது 5000 எம்ஏஹெச்.

    ஒரு போனிற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ள இந்த போனானது என்எப்சி அமைப்பினைக் கொண்டுள்ளது.

    இந்நிலையில் இந்த நத்திங் போனின் இயங்குதளமானது எப்படி இருக்கும் என்று பயனர்கள் அறிந்துகொள்வதற்காக தங்களது லான்சரினை அறிமுகப்படுத்தியுள்ளது. நத்திங் லான்சர் (Nothing launcher) என்ற பெயரில் கூகிள் பிளேஸ்டோரில் தரவிறக்கம் செய்து இந்த லான்சரின் வசதிகள் பற்றி பயனாளர்கள் தெரிந்து கொள்ளலாம் ன்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

    விலை பற்றி எந்த விதமான விபரங்களும் வெளிவராத நிலையில், இந்த போனானது இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்தில் ஃபிலிப்கார்ட் தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்னை நார்க் கழிவில் உரம் தயாரிப்பு: விவசாயிகளுக்கு மாற்று வருமானம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....