Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்பராமரிப்புமரம் நடுபவரா நீங்கள்? உங்களுக்கான 10 முக்கிய விதிமுறைகள்!

    மரம் நடுபவரா நீங்கள்? உங்களுக்கான 10 முக்கிய விதிமுறைகள்!

    இயற்கையின் ஓர் முக்கிய அங்கமாக இருப்பவை தான் மரங்கள். பருவநிலை மாற்றத்தைக் காப்பதில் மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. மரம் நடுவதில், இடங்களுக்கு ஏற்ற வகையில் தகுந்த மரக்கன்றுகளை நடுவது தான் மிக முக்கியமானது. மரங்கள் பலவும் மனிதர்களுக்கு பலவிதப் பயன்களைத் தரக்கூடியது. மரங்களை வளர்ப்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு காடுகளை அழிக்காமல் பாதுகாப்பது முக்கியமானது.

    உயிரினங்களுக்கு மரங்கள் தான் முக்கிய வசிப்பிடமாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வருடந்தோறும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் குறைந்தது ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும். மரம் நடுவதற்கு முக்கியமான 10 விதிமுறைகளை அறிவியலாளர்கள் பரிந்துரைகின்றனர் இதைக் கவனமாக பின்பற்றுவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.

    1. காடுகள் பாதுகாப்பு

    காடுகளை இருக்கும் நிலையிலேயே விட்டுவிட வேண்டும். மாற்றங்கள் செய்யப்படாத பழைய காடுகள் தான் அதிக அளவில் கரியமிலவாயுவை உள்வாங்கும். இருக்கும் காடுகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

    2. உள்ளூர் மக்களை ஒன்று சேர்த்தல்

    மரக்கன்றுகள் நடும் போது, உள்ளூர் மக்களை ஒன்றிணைத்துக் கொள்வது நல்லது. அதிக மக்கள் ஒன்றிணைந்தால் நடப்படும் மரக்கன்றுகளின் எண்ணிக்கையும் உயரும்.

    3. பல நோக்கங்கள்

    மரம் நடுவதை ஒரே கண்ணோட்டத்துடன் காணாமல், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தீர்வு, பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பொருளாதார நன்மைகள் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

    4. சரியான இடம்

    அதிக ஈரத்தன்மை கொண்ட இடங்கள் அல்லது புல்தரையில் மரங்களை நட வேண்டாம். முன்பு காடுகளாக இருந்து அழிக்கப்பட்ட இடங்களில் மரங்களை நடுவது சிறந்தது.

    5. தானாக வளரும் மரங்கள்

    புதிதாய் ஒரு மரக்கன்றை நட்டு அதை வளர்ப்பதை விட, தானாக வளரும் மரங்களை நன்றாக கவனித்துக் கொள்வது சிறந்த பலனை அளிக்கும்.

    6. சரியான மரத்தை தேர்ந்தெடுப்பது

    மரங்களை நடத் திட்டமிடும் அதே சமயத்தில், சரியான மரங்களை தேர்வு செய்வதும் அவசியம். எந்தப் பகுதியில் மரம் நட முடிவு செய்தீர்களோ, அப்பகுதியில் இயல்பாக வளரும் மரங்களை தேர்வு செய்வது நல்லது. இதில் அரிதான மர வகைகளையும், பொருளாதார வகையில் நன்மை பயக்கும் மரங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அந்தப் பகுதியை புதிதாக ஆக்கிரமிக்கும் தன்மை கொண்ட மரங்களை தேர்வு செய்யாமல் இருப்பதே சிறப்பு.

    7. பருவநிலை

    ஒரு குறிப்பிட்ட பகுதியில் மரம் நடத் திட்டமிடப்பட்டால், அந்தப் பகுதியினுடைய பருவநிலை குறித்தும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம். எதிர்காலத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களுக்கு ஒத்துப் போவதாகவும் இருக்க வேண்டும்.

    8. மரக்கன்றுகளை எங்கு வாங்குவது

    உள்ளூர்ப் பகுதியில் வளரக்கூடிய மரம் எனில், அதை வேறு எங்கோ சென்று வாங்குவதை காட்டிலும் அதை அந்த உள்ளூர் மக்களுடன் இணைந்து பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவது தான் சிறந்தது.

    9. உள்ளூர்வாசிகள் அறிவும், அறிவியலும்

    உள்ளூர்வாசிகள் சொல்வதையும், அறிவியல் தகவல்களையும் இணைத்து, யோசித்துத் திட்டமிடுவது நலம். முதலில் சிறிய அளவில் மரக்கன்றுகளை நட்டுப் பழகுங்கள்.

    10. பொருளாதார பயன்கள்

    மரங்கள் நடப்படும் நடவடிக்கைகள் தொடர வேண்டுமானால், அந்தப் பகுதியில் இருக்கும் ஏழைகள் உள்பட அனைவருக்கும் மரங்களின் மூலம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொருளாதார ஆதாயம் கிடைக்க வேண்டும்.

    தனது முதல் மொபைல் போனை வெளியிடத் தயாராகும் நத்திங் நிறுவனம்..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....