Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபூஞ்சை பாதிப்புக்கு உள்ளானாரா சோனியா காந்தி? - விளக்கமளித்த காங்கிரஸ்!

    பூஞ்சை பாதிப்புக்கு உள்ளானாரா சோனியா காந்தி? – விளக்கமளித்த காங்கிரஸ்!

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இவர் ஏற்கனவே இருண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்ட பிறகும், கொரோனா வைரஸால் இவர் பாதிக்கப்பட்டார்‌. இந்நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனாவிற்கான சிகிச்சையை எடுத்து வந்தார்.

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பண மோசடி விவகாரத்தில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் நேரில் ஆஜராகும் படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. தற்போது, இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில், சோனியா காந்திக்கு மூச்சுக் குழாயில் பூஞ்சைத் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மூச்சுக் குழாயில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது.

    காங்கிரஸ் தலைவராக இருக்கும் சோனியா காந்தி, கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு கொரோனா பாதித்த அடுத்த நாளே, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவர்கள் இருவரும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். இதற்கிடையே சோனியா காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, கடந்த 12 ஆம் தேதி டில்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், சோனியா காந்திக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. இதில், சோனியா காந்தியின் மூச்சுக் குழாயில் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, அவர் பிற கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சோனியா காந்தியின் உடல்நிலை கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு உரிய சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக 14 பேர் கொண்ட மேலாண்மை குழு அமைப்பு – பாஜக முடிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....