Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக 14 பேர் கொண்ட மேலாண்மை குழு அமைப்பு - பாஜக...

    ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக 14 பேர் கொண்ட மேலாண்மை குழு அமைப்பு – பாஜக முடிவு!

    இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில், அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை அடுத்து குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தொடங்கியது. ஆனால், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியோ, எதிர்க்கட்சிகளோ தங்களது வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பான ஆலோசனைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஜூன் 29ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 2 ஆகும். இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, எதிர்க்கட்சிகளுடன் டெல்லியில் நேற்று முன்தினம் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பவாரை அனைவரும் முன்மொழிந்த நிலையில்,உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன்னால் நிற்க முடியாது என்று சரத்பவார் மறுத்த நிலையில்,மறுபரிசீலனை செய்யுமாறு எதிர்க்கட்சிகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனிடையே,ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் பணியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக 14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை பாஜக அமைத்துள்ளது. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தலைமையிலான குழுவில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்னவ்,கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக,இக்குழுவில் தமிழகத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 776 எம்.பி.க்கள் 4,033 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள். இவர்களது ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 79 ஆயிரத்து 206 ஆகும். இதில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு பெறுபவர் வெற்றி பெற முடியும்.பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 5 லட்சத்து 26 ஆயிரத்து 420 வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 892 வாக்குகள் உள்ளன. எந்த அணியையும் சேராத மாநில கட்சிகளுக்கு 2 லட்சத்து 92 ஆயிரத்து 894 வாக்குகள் உள்ளன. பாஜக கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு சுமார் 13 ஆயிரம் வாக்குகள் குறைவதாக தெரியவந்துள்ளது.

    மாநில கட்சிகளின் ஆதரவை பெற்று பாஜக நிறுத்தும் வேட்பாளர் எளிதாக வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்கட்சியினரும் தங்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதால் குடியரசுத்தலைவர் தேர்தல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வித்தியாசமான முறையில் விடுமுறை விண்ணப்பம்; சமூக வலைதளங்களில் புன்னகையோடு பரவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....