Monday, March 18, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்வித்தியாசமான முறையில் விடுமுறை விண்ணப்பம்; சமூக வலைதளங்களில் புன்னகையோடு பரவல்!

    வித்தியாசமான முறையில் விடுமுறை விண்ணப்பம்; சமூக வலைதளங்களில் புன்னகையோடு பரவல்!

    படிக்கும்போதும் சரி பணியில் இருக்கும்போதும் சரி.. விடுமுறை கேட்டு எழுதப்படும் விண்ணப்பங்கள், அதிக அளவு பொய்யினைச் சுமந்து செல்லும் கடிதங்களில் ஒன்று. விடுப்பு வேண்டும் என்பதற்காக இறந்து போன தாத்தா பாட்டிகளை மீண்டும் ஒரு முறை இறக்க வைப்பது, இல்லாத நோயினை இருப்பதாகக் கூறுவது, நடக்காத நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ளப்போவது, கற்பனையில் தோன்றிய காரணங்களை கட்டவிழ்த்தது விடுவது என.. விடுமுறை விண்ணப்பங்களில் நாம் கூறியுள்ள பொய்களை வைத்து ஒரு புரட்டு புத்தகமே எழுதிவிடலாம்.

    மற்றொரு விதத்தில் கூற வேண்டுமென்றால், இந்த விடுமுறை விண்ணப்பங்கள் நாம் கூறும் பொய்களை மட்டுமின்றி பின்னாளில் நீங்கா இடம்பிடிக்கப்போகும் நினைவுகளையும் சுமந்துச் செல்கின்றன.

    இணையம் அதிகம் உபயோகத்தில் இல்லாத நாட்களிலும், மீம்கள் வருகை இல்லாத காலத்திலும் பொய்களையும், புனைவுக்கதைகளையும் கலந்து எழுதிய விடுமுறை விண்ணப்பங்கள் பெரிதளவு கவனத்தினை ஈர்க்க தவறிவிட்டன.

    ஆனால் தற்போதுள்ள இனைய உலகத்தில் அது சாத்தியமில்லை அல்லவா! இருமினாலும் தும்மினாலும் கூட அந்த நிகழ்வு இணையத்தில் வெகு வேகமாக பகிரப்பட்டு வரும் காலத்தில் வித்தியாசமாக எழுதப்படும் விடுமுறை விண்ணப்பங்கள் மட்டும் எப்படி சிக்காமல் போகும்?

    அந்த வகையில், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் எழுதியுள்ள விடுமுறை விண்ணப்பம் ஒன்று தற்போது இணைய வாசிகள் கையில் சிக்கியுள்ளது.

    அந்த ஊழியர் எழுதியுள்ள விடுமுறை விண்ணப்பத்தினை பார்க்கும் இணைய வாசிகள் அனைவரும் தங்களது விடுமுறைக் கடித நினைவுகளில் மூழ்கிப்போயுள்ளனர்.

    தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஷாஹில் என்பவர் இந்த விடுமுறைக் கடிதத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விண்ணப்பத்தினை அவரது அணியில் இருக்கும் ஒருவர் அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளார்.

    Leave letter
    தனியார் ஊழியர் அனுப்பிய வித்தியாசமான விடுமுறை விண்ணப்பம்.

    வேறு ஒரு நிறுவனத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்று அந்த ஊழியர் தனது விடுமுறை விண்ணப்பத்தில் எழுதியுள்ளார்.

    அந்த ஊழியரின் நேர்மையினைப் பாராட்டி பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இதுமாதிரியான பல வித்தியாசமான விடுமுறை விண்ணப்பங்களையும் சமூக ஊடகத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    “அப்ப வச்சுக்கிறேன் உன்னை” – மா.சுப்ரமணியன் முன்னிலையில் தாம்பரம் துணை மேயர் பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....