Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஉஷாரா இருங்க சென்னை வாசிகளே: கொரோனா பரவல் வேகம் அதிகரிப்பு! இத்தனை வேகமா?

    உஷாரா இருங்க சென்னை வாசிகளே: கொரோனா பரவல் வேகம் அதிகரிப்பு! இத்தனை வேகமா?

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், இப்போது கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், சில மாநிலங்களில் முகக் கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 90 நாட்களுக்குப் பிறகு, தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூரைச் சேர்ந்த, 18 வயது இளம்பெண் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னையில் உயிரிழந்துள்ளார் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இது அனைவரிடத்திலும் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒமிக்ரான் மற்றும் அதன் உருமாற்ற வகைகளான பிஏ4 மற்றும் பிஏ5 நுண்மிகளால், இதுவரையில் அச்சுறுத்தும் வகையில் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனால் இப்போது, இணைநோய்கள் ஏதுமில்லாமல், கொரோனாவால் இளம்பெண் உயிரிழந்திருப்பது, பல கேள்விகளை எழுப்பி வருகிறது.

    தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முறையே 8.4 மற்றும் 9.1 என்ற விகிதத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்ததாக கோவையில் கொரோனா பாதிப்பு விகிதம் 3.7 ஆக உள்ளது. கடைசியாக, தமிழகத்தில் கடந்த மார்ச் 17 ஆம் தேதி ஒருவர் உயிரிழந்தார். கடந்த இரு வாரங்களாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. இருப்பினும், உயிரிழப்பு இல்லாததால் சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால், நேற்று சென்னையில் இளம்பெண் இறந்ததையடுத்து, கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 7,45,046 ஆக உயர்ந்துள்ளது; 9,000 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

    மக்கள் நல்வாழ்வுத் துறையின் அறிக்கையின் படி, கடந்த புதன்கிழமை தமிழகத்தில் 476 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் சென்னையில் 221 பேரும், செங்கல்பட்டில் 95 பேரும் பாதிக்கப்பட்டனர். இதனால், முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும், பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

    தேதி வாரியாக சென்னையில் கொரோனா பாதிப்பு விவரம்:

    ஜூன் 1 – 59
    ஜூன் 2 – 58
    ஜூன் 3 – 81
    ஜூன் 4 – 61
    ஜூன் 5 – 43
    ஜூன் 6 – 48
    ஜூன் 7 – 82
    ஜூன் 8 – 95
    ஜூன் 9 – 94
    ஜூன் 10 – 129
    ஜூன் 11 – 111
    ஜூன் 12 – 124
    ஜூன் 13 – 127
    ஜூன் 14 – 171
    ஜூன் 15 – 221

    தமிழ்நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை, 1,938 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 34,18,481 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து உள்ளனர். மேலும், 38,026 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஓபிஎஸ் பேசிய பேச்சு; ஆடிப்போன இபிஎஸ் ஆதரவாளர்கள், இதோ பெரிய திருப்பம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....