Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்ஓபிஎஸ் பேசிய பேச்சு; ஆடிப்போன இபிஎஸ் ஆதரவாளர்கள், இதோ பெரிய திருப்பம்...

  ஓபிஎஸ் பேசிய பேச்சு; ஆடிப்போன இபிஎஸ் ஆதரவாளர்கள், இதோ பெரிய திருப்பம்…

  அதிமுகவில் ஒற்றை தலைமை விவாதம் உச்சம் அடைந்துள்ள நிலையில், நேற்று முதல்நாள் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதம் நடைபெற்றது. கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்றும் நிர்வாகிகள் குரல் எழுப்பி இருக்கிறார்கள்.

  20க்கும் மேற்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், எடப்பாடியை ஒற்றை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

  முக்கியமான சட்ட விதிகளை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பு எதிர்க்க கூடும் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்த நிலையில் கூட்டத்தில் இருந்து கோபமாக வெளியேறிய ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக நிர்வாகிகள் சிலர் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. நீங்கள் பொதுச்செயலாளர் பதவியை விட்டுக்கொடுங்கள். கட்சியில் உங்களுக்கு வேறு பதவி கொடுக்கிறோம். உங்கள் மகனுக்கும் தொடர்ந்து எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருகிறோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு சலுகைகள் கொடுத்துள்ளது.

  இதற்கு ஓபிஎஸ்,..

  “என்னங்க கடந்த வருஷம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தேர்வு முறையில் மாற்றம் செய்ததை மறந்துட்டீங்களா? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரையும் நிர்வாகிகள்தான் தேர்வு செய்ய முடியும். அதே சமயம் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால், அதில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரமும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் இருக்கிறது.

  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டு பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றினாலும் கடைசியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் அதில் கையெழுத்து போட வேண்டும், தெரியுமா? நான்தான் கடைசியில் ஒருங்கிணைப்பாளராக அதில் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று தெரியுமா?” என்று ஒரேயடியாக லாக் வைத்திருக்கிறாராம்.

  இதனால் ஓபிஎஸ் கூறுவது என்னவெனில், நீங்கள் என்னதான் பொதுச்செயலாளர் பற்றி தீர்மானம் நிறைவேற்றினாலும் சுற்றி சுற்றி கடைசியில் என்னிடம்தான் வர வேண்டும் என்பது தான்.

  மேலும், ஒருங்கிணைப்பளார், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வை மாற்ற பொதுக்குழுவிற்கே அதிகாரம் இல்லை என்றும் ஓபிஎஸ் சொல்லி இருக்கிறாராம். நான் என்னை நீக்கவே கையெழுத்து போடுவேன் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளாராம் ஓபிஎஸ்.

  இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத சமாதானம் செய்ய வந்த 4 எடப்பாடி ஆதரவாளர்களும் நேராக வண்டியை எடப்பாடி இடத்திற்கு விட்ட அந்த 4 பேரும், ஓபிஎஸ் சொன்னதை புட்டு புட்டு வைத்துள்ளனர். இதை கேட்டு எடப்பாடி தரப்பு, சட்டப்படி அவர் சொல்வது சரிதான். செயற்குழு மூலம் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் நியமனத்தில் கடந்த வருடம் இந்த மாற்றம் செய்யப்பட்டது.

  பொதுக்குழு மூலம் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. எனவே மீண்டும் செயற்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி சட்ட விதிகளை மாற்ற வேண்டும். அப்போதுதான் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்க முடியும் என்று எடப்பாடி தரப்பு கூறி உள்ளதாம்.

  ‌ராகுல் காந்திக்கு ஆதரவாக போராட்டம்: காவல் அதிகாரியின் சட்டையைப் பிடித்த முன்னாள் அமைச்சர்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....