Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநளினி மற்றும் ரவிச்சந்திரன் வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..

    நளினி மற்றும் ரவிச்சந்திரன் வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..

    நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கான மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு தரப்பில் 2018ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

    ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட தீர்மானத்தின் மீது இரண்டு வருடங்களாகியும் ஆளுநர் எந்த விதமான முடிவினையும் எடுக்காத நிலையில், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுதலை செய்யும்படி நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

    இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனும், அரசு தரப்பில் வழக்கறிஞர் ஷண்முகசுந்தரமும் வாதிட்டனர். இந்த வழக்கினை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் விசாரித்தனர்.

    மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், அமைச்சரவைவின் ஒருங்கிணைந்த ஒப்புதலின் அடிப்படையில் வழங்கிய தீர்மானத்தின் மீது இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்ததும், பிறகு அந்த தீர்மானத்தினை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்ற கருத்தினை முன்வைத்திருந்தார்.

    உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திராமல் விடுதலை செய்யும்படி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றமானது தீர்ப்பு வழங்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

    விடுதலை செய்வதற்கு ஆளுநரின் கையெழுத்து முக்கியமானது என்று அரசுத்தரப்பு வழக்கறிஞரும் வாதிட்டிருந்தார்.

    வழக்கறிஞர்கள் இருவரது வாதத்தினையும் விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று காலை 10:30 மணிக்கு வழங்கப்பட்டது.

    நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை ஆளுநரின் உத்தரவு இன்றி விடுதலை செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

    பேரறிவாளனை விடுதலை செய்தது போல சிறப்பு அதிகாரத்தினைப் பயன்படுத்தி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கினைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

    “அப்ப வச்சுக்கிறேன் உன்னை” – மா.சுப்ரமணியன் முன்னிலையில் தாம்பரம் துணை மேயர் பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....