Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உக்ரைன் இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவார்களா? - ரஷ்யா உதவுமா?

    உக்ரைன் இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவார்களா? – ரஷ்யா உதவுமா?

    கிழக்கு உக்ரைனின் செவெரோடொனட்க்ஸ் நகர ரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக சிறப்பு வழித்தடத்தை ஏற்படுத்தவுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.

    நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்தது மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் உறவு வைத்தது உள்ளிட்ட உக்ரைன் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போரை தொடங்கியது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 3 மாதங்களை கடந்த நிலையில் போரின் தாக்கம் என்பது இன்றும் குறையாமல் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் நாட்டை காலி செய்து விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

    உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில், இதனால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். முக்கிய துறைமுக நகரங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் உலக நாடுகள், உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதேபோல் ரஷ்யாவிற்கு எதிர்வினையாற்றும் வகையில் பொருளாதார தடைகளையும் விதித்தன. இருந்த போதிலும் ரஷ்யா போரை நிறுத்தவில்லை.

    இதேபோல் கிழக்கு உக்ரைனின் செவெரோடொனட்க்ஸ் நகரையும் ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன. தற்போது அந்த நகரின் பெரும்பாலான பகுதிகள் ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அஸோட் என்றழைக்கப்படும் அந்த ரசாயன ஆலையின் சுரங்க அறைகளில் உக்ரைன் படையினருடன் 500க்கும் மேறப்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், அஸோட் இரசாயன ஆலைக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேறுவதற்கு வசதியாக பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்தவுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரசாயன ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் பொதுமக்கள், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    மனிதநேயக் கொள்கையை ரஷ்ய பாதுகாப்புத் துறை பின்பற்றுகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த பாதுகாப்பு வழித் தடம் ஏற்படுத்தப்படுகிறது. லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பெரிய நகரமான செவெரோடொனட்ஸ்கையும் அருகிலுள்ள லிசிசான்ஸ்க் நகரையும் கைப்பற்றினால், அந்த மகாணம் முழுவதும் ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

    ஓபிஎஸ் பேசிய பேச்சு; ஆடிப்போன இபிஎஸ் ஆதரவாளர்கள், இதோ பெரிய திருப்பம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....