Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாராணுவ வீரரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட பயணசீட்டு பரிசோதகர்; இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட பரிதாபம்

    ராணுவ வீரரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட பயணசீட்டு பரிசோதகர்; இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட பரிதாபம்

    ரயிலில் இருந்து தள்ளிவிட்ட பயணசீட்டு பரிசோதகரால், ராணுவ வீரர் இரண்டு கால்களை இழந்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தை சேர்ந்தவர் சோனு சிங் குமார். ராணுவ வீரரான சோனு சிங் குமார் தில்லியில் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதனால் பணியில் சேர்வதற்காக பேரலி ரயில் நிலையத்திலிருந்து ராஜ்தானி விரைவு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அப்போது ரயில் நிலையத்திற்கு தாமதமாக சென்றதால், ரயில் புறப்படும் போது தனது முன்பதிவு பெட்டியில் அவசரமாக ஏற முயன்றார்.

    அப்போது அந்த பெட்டியில் இருந்த பையன டிக்கெட் பரிசோதகர் சுபன் போரே ராணுவ வீரர் சோனு சிங் குமாரை ஏறவிடாமல் தடுத்து வாக்குவாதத்தை ஈடுபட்டு சோனு சிங்கை கீழே தள்ளிவிட்டு கதவை திடீரென சாத்தினார். அப்போது நிலை தடுமாறிய சோனு சிங் குமார் ஓடிக் கொண்டிருந்த ரயில் பெட்டிக்குள் இடையே தண்டவாளம் இரண்டில் விழுந்தார் இந்த சம்பவத்தில் அவரது ஒரு கால் துண்டானது; மற்றொரு கால் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை அடுத்து அங்கிருந்த பொதுமக்களும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும் கூச்சலிட்டு அலறினர். இதைக் கேட்ட ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்தினார்.

    பிறகு சோனு சிங் குமாரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இரண்டு கால்களும் வெட்டி துண்டிக்கப்பட்டது.

    ராணுவ வீரரை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர் சுபன் போரை அங்கிருந்து தப்பியோடி தலைமறைவான நிலையில், ரயில்வே காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலை மறைவான சுபன் போரேவை கைது செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 கீழ் (கொலை முயற்சி) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கால்பந்து உலகக் கோப்பையில் பீர் விற்கத் தடை; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கத்தார்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....