Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்யின் திரைப்படத்தை கைப்பற்றியது யார்? மாஸ்டர் செய்த மாயத்தை வாரிசு செய்யுமா?

    விஜய்யின் திரைப்படத்தை கைப்பற்றியது யார்? மாஸ்டர் செய்த மாயத்தை வாரிசு செய்யுமா?

    விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை, 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், வாரிசு. ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஷ்யாம் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கும் இத்திரைப்படத்தை, பிரபல இயக்குநர் வம்சி இயக்குகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். 

    வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திரைப்பட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமன் இசையில் உருவாகிவரும், வாரிசு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளிவந்து யூடியூப் தளத்திலும், ரீல்ஸ்களிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. 

    வாரிசு திரைப்படத்துடன் பொங்கலுக்கு களமிறங்கும் மற்றொரு திரைப்படம் துணிவு. அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்து, ரிலீஸூக்கான வேலைகளையும் ஆரம்பித்து விட்டது. ஆனால், வாரிசு திரைப்படத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் திரைப்பட வெளியீட்டு உரிமம் யாருக்கென்று தொடர்ந்து கேள்விகள் எழுந்த வண்ணமே இருந்தன. 

    இந்நிலையில்தான், நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை  7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இச்செய்தியை அதிகார்ப்பூர்வமாக 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்துள்ளளது. 

     முன்னதாக, விஜய் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற மாஸ்டர் திரைப்படத்தை  ‘7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம்’ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

    ‘எனக்கு அது பொருந்தாது’ என உரக்க கூறிய நயன்தாரா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....