Saturday, March 16, 2024
மேலும்
    Homeவானிலைசென்னை, கடலூர் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை

    சென்னை, கடலூர் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை

    சென்னை, கடலூர் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

    தென்மேற்கு வங்க கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (21.11.2022) காலை 0530 மணி அளவில் காரைக்கால் இருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 

    இது, மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திர, தமிழகம்-புதுவை  கடற்கரை நோக்கி நகர்ந்து நாளை (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

    இதன் காரணமாக ஆந்திர கடலோர பகுதிகள், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

    அதேபோல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3 ஆம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

    அதேபோல் பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று மற்றும் நாளை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கார்த்திகை தீபம் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....