Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

    புதுச்சேரி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

    வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்க கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (21.11.2022) காலை 5.30 மணி அளவில் காரைக்கால் இருந்து கிழக்கு – வடகிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவிலும் , சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திர, தமிழக-புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து நாளை (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

    இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவ படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை, கடலூர் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....