Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க முடியாது; உயர்நீதிமன்றம் காட்டம்

    குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க முடியாது; உயர்நீதிமன்றம் காட்டம்

    பள்ளி வாகனங்களுக்கு இருப்பதைப் போல பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லக்கூடிய ஆட்டோகளுக்கு தனி விதிமுறைகள் இல்லாத காரணத்தால் அதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

    நாகர்கோயில் பட்டகசாலியன்விளையைச் சேர்ந்த ஸ்ரீ ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்ததாவது:

    பள்ளி பேருந்துகளுக்கான மோட்டார் வாகன சிறப்பு விதிகளை கொண்ட அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி அமல்படுத்தியது. அதில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். வேகக் கட்டுப்பாட்டு கருவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். ஓட்டுநர் மட்டுமின்றி உரிமம் பெற்ற நடத்துநரும் வாகனத்தில் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இருப்பினும், பெரும்பாலான பள்ளிகள் இந்த விதிகளை முறையாக பின்பற்றுவது இல்லை. பள்ளி வாகனங்களில் அதிகமான மாணவர்களை ஏற்றி கொள்வது, வாகனங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது; வாகனங்களில் பள்ளியின் பெயர் குறிப்பிடாமல் இருப்பது; நடத்துநர் இல்லாதது போன்ற விதிமுறைகள் தொடர்ந்து இருக்கின்றன.

    இதையும் படிங்க: உலகக் கோப்பை அணிகள் ஆடுவதற்கா? மழை ஆடுவதற்கா? – தொடர்ந்து ஏமாற்றத்தில் ரசிகர்கள்

    பெரும்பாலான பள்ளிகளுக்கு சொந்த வாகனங்கள் இருப்பதில்லை. இதனால் பள்ளிகள் வாடகைக்கு வாகனங்களை அமர்த்திக் கொள்கின்றன. இந்த வாகனங்கள் உரிய விதிகளை பின்பற்றுவதில்லை. சில பள்ளிகள் தங்களது மாணவர்களை ஆட்டோகளில் அழைத்து வருகின்றன. இதனால் பள்ளி வாகனங்களுக்கான விதிகளை முறையாக பின்பற்ற உத்தரவிட வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருப்பது அவசியம். குழந்தைகளை ஆட்டோக்களில் பள்ளிக்கு எப்படி அனுப்புகின்றனர்; பல்வேறு விதிகள் உள்ளன. ஆனால், பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லக்கூடிய ஆட்டோக்களுக்கு என என்ன விதிமுறை இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். 

    மேலும் இது முக்கிய பிரச்சினையாக உள்ளதால் இது குறித்து பள்ளி கல்வித்துறையிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.

    இதையும் படிங்க: வேலை போயும் அடித்த ‘ஜாக்பாட்’! எலான் மஸ்க்கால் தூக்கப்பட்ட இந்தியருக்கு இவ்வளவு இழப்பீடா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....