Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகேட்சை தவறவிட்ட இலங்கை வீரர்...இதுதான் சமயமென விளாசிய பிலிப்ஸ்!

    கேட்சை தவறவிட்ட இலங்கை வீரர்…இதுதான் சமயமென விளாசிய பிலிப்ஸ்!

    இலங்கைக்கு எதிரான இருபது ஓவர் உலகக் கோப்பை ஆட்டத்தில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது நியூசிலாந்து அணி.

    2022-ம் ஆண்டுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று சிட்னியில் நியூசிலாந்து – இலங்கைக்கு இடையிலான ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. 

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, இலங்கை பணி பந்துவீசியது. அதிரடியான தொடக்கம் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்க, முதல் ஓவரில் ஃபின் ஆலனை 1 ரன்னில் போல்ட் செய்தார் இலங்கையின் பந்துவீச்சாளர், தீக்ஷனா. பிறகு கான்வே 1 ரன்னிலும் வில்லியம்சன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் 4-வது ஓவரின் முடிவில் 15/3 என்கிற நிலையில் இருந்தது நியூசிலாந்து. 

    நியூசிலாந்து சரியத்தொடங்கி விட்டது போன்ற தோரனை தெரிய, டேரில் மிட்செல்லும் கிளென் பிலிப்ஸும் அருமையான கூட்டணியை அமைத்து நியூசிலாந்தை சரிவிலிருந்து மீட்கத் தொடங்கினர். பொறுமையாக விளையாடி வந்தவர்கள் 14-வது ஓவரில் இருந்து கியரை மாற்ற நியூசிலாந்து பக்கம் ரன்கள் வரத்தொடங்கியது. கிளென் பிளிப்ஸ் 64 பந்துகளுக்கு 104 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். 

    பிலிப்ஸ் 12 ரன்களில் இருந்தபோது அவர் வழங்கிய எளிதான கேட்சை நழுவ விட்டார் நிசங்கா. இந்த கேட்சின் விலை பின்னர் சதமாக மாறியது. மொத்தத்தில், 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் பிலிப்ஸ் இரண்டாவது வீரராக சதமடித்துள்ளார். முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் ரில்லி ரூசோவ்  109 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: இந்தியாவில் புதிதாக இன்று 1,574 பேருக்கு உறுதியான தொற்று…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....