Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசமூக ஊடகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை! புதிய அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு

    சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை! புதிய அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு

    சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. 

    சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தி வழங்குவதில் ட்விட்டர் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் முடிவுகளுக்கு எதிராக பயனாளிகள் கொண்டிருக்கும் குறிகளை நிரவர்த்தி செய்ய, மேல்முறையீட்டுக் குழுக்களை அமைக்கும் விதிகளை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. 

    மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குறைகள் மேல்முறையீட்டுக் குழு மூன்று மாதங்களில் அமைக்கப்படும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மேலும் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக பயனாளர்களின் புகார்களை 24 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.புகார் பெற்ற 15 நாட்களில் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 

    இதுகுறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பயனர்களை மேம்படுத்துதல்.. இடைத்தரகரால் நியமிக்கப்பட்ட குறைதீர்ப்பு அதிகாரியின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக புகார் மேல்முறையீட்டுக் குழு (ஜிஏசி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க:திருமணமாகாமலே கர்ப்பமானது எப்படி? இணையத்தில் வைரலாகும் நடிகைகள் பதிவிட்ட பிரெக்னன்ஸி டெஸ்ட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....