Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மது விற்பனைக்குத் தடை - காரணம் என்ன?

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மது விற்பனைக்குத் தடை – காரணம் என்ன?

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  

    அக்டோபர் 30-ம் தேதியாகிய நாளை தேவர் ஜெயந்தி மற்றும் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

    கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபானக் கடைகளும், மதுபானக் கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

    மது பானம் விற்பனை, மது பானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மது பானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, தமிழகத்தில் தீபாவளி (மூன்று நாட்களில்) நாட்களில் மட்டும் 708.29 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: யார்ரா நீங்க எல்லாம்…? ஓடும் காரின் மேற்கூரையில் பட்டாசு வெடித்து அட்டூழியம்! வைரல் வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....